'கேம் சேஞ்சர்' படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா?

ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

Update: 2024-10-19 09:52 GMT

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இப்படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் 'ரா மச்சா மச்சா' பாடல் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மட்டும் அதிக அளவில் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுமார் ரூ.20 கோடி செலவில் அந்த பாடல் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே இதுவரை ஒரு பாடலுக்கு மட்டும் இவ்வளவு பணம் செலவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்