'கோட்' படத்தின் நான்காவது பாடல் வெளியானது

விஜய் நடித்த 'கோட்' படத்தின் நான்காவது பாடலான "மட்ட" வெளியாகியுள்ளது.;

Update: 2024-08-31 12:38 GMT

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஒரு ஸ்பெஷல் பாடல் எனவும் இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும், மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் எனவும் இயக்குனர் வெங்கெட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்