மீடூ-வில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகை 101 வயதில் காலமானார்

அமெரிக்காவில் தொழிலதிபரான அவரை எதிர்த்து, கடுமையாக போராடினேன் என ஹாலிவுட் நடிகை பெய்ஜ் கூறினார்.

Update: 2024-06-06 06:45 GMT

நியூயார்க்,

ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்பட்டவர் ஜேனிஸ் பெய்ஜ். பேச்சுலர் இன் பாரடைஸ், பிளீஸ் டோன்ட் ஈட் தி டெய்சீஸ், பாலோ தி பாய்ஸ் உள்ளிட்ட நகைச்சுவை நிறைந்த படங்களில் நடித்து புகழ் பெற்றார். அவர், தன்னுடைய 90-வது வயதில் கூட நடிப்பை விட்டு விடாமல், தொடர்ந்து பாராட்டை பெற்றார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடைய 101 வயதில், இயற்கையான முறையில் அவர் மரணம் அடைந்துள்ளார். இதனை அவருடைய நீண்டகால நண்பரான ஸ்டூவர்ட் லாம்பெர்ட் தெரிவித்து உள்ளார்.

பெய்ஜின் உண்மையான பெயர் டோனா மே ஜேடன். திரைப்படங்களில் நடிக்க வந்ததும் பெயரை ஜேனிஸ் பெய்ஜ் என மாற்றி கொண்டார். டூ கைஸ் பிரம் மில்வாகீ, லவ் அண்ட் லேர்ன், ஆல்வேஸ் டுகெதர், வால்பிளவர் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில், 2018-ம் ஆண்டு அவர் மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார். இதுபற்றி அவர் கூறும்போது, 22 வயது இருக்கும்போது அந்த சம்பவம் நடந்தது என கூறினார். பெரிய பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளரான ஆல்பிரட் புளூமிங்டேல் என்பவருக்கு எதிராக அவரது இந்த குற்றச்சாட்டு அமைந்தது.

அமெரிக்காவில் தொழிலதிபராக இருந்த புளூமிங்டேல் பற்றி குறிப்பிட்ட பெய்ஜ், அவருடைய கரங்கள் தன் மீது படர்ந்தன. நெஞ்சு உள்பட எல்லா பகுதிகளுக்கும் சென்றன. பெரிய, பலசாலியாக இருந்த அவரை எதிர்த்து போராடினேன். மிதித்து, கடித்து வைத்தேன். சத்தம் போட்டேன் என இதுபற்றி எழுதியுள்ளார்.

95 வயதில், நேரம் எனக்கு சாதகம் இல்லை என்றபோதும், அமைதியாக நான் இருக்கவில்லை. மீடூ இயக்கத்தில் என்னுடைய பெயரையும் இணைத்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்