'வாழை' படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்

மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படத்திலிருந்து மூன்றாவதாக 'ஒத்தச் சட்டி சோறு...' என்ற பாடல் நாளை மாலை வெளியாக உள்ளது.

Update: 2024-08-04 11:28 GMT

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார்.

மாரி செல்வராஜின் 'வாழை' படத்திலிருந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இத்திரைப்படத்திலிருந்து 3-வது பாடல் நாளை வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாளை மாலை 6 மணிக்கு 3-வது பாடலான 'ஒத்தச் சட்டி சோறு' வெளியாகிறது என கூறியுள்ளார்

மேலும் இப்படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்