12 ஆண்டுகளை நிறைவு செய்த 'நீ தானே என் பொன்வசந்தம்'... புகைப்படங்களை பகிர்ந்து கவுதம் மேனன் நெகிழ்ச்சி

'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-12-14 14:57 GMT

சென்னை,

2012ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் 'நீ தானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படம் வெளியானது. இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஜீவா ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். பள்ளி மாணவி தோற்றத்திலும் சரி, அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பள்ளி ஆசிரியையாக இருக்கும் தோற்றத்திலும் சரி கச்சிதாக பொருந்தியிருப்பார் சமந்தா. சமந்தா தமிழில் நடித்த படங்களில் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது.

ஜீவா ஜோடியாக சமந்தா நடிப்பில் வெளியான 'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தில் வரும் பழைய பாடலான "நீ தானே என் பொன் வசந்தம்" என்ற பாடலும் இத்திரைப்படத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றுடன் 'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், " 'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படத்தின் இசை எனக்காவும், நமக்காகவும், இந்த மொத்த உலகத்துக்காகவும் இளையராஜா கொடுத்த அன்பின் வெளிப்பாடு!" என்று கவுதம் வாசுதேவ் மேனன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்