இயக்குநரின் பாலியல் துன்புறுத்தல் குறித்து 'பிச்சைக்காரன் 2' பட நடிகை புகார்

ஆடிஷன் என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக நடிகை காவ்யா தாபர் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-16 12:35 GMT

மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காவ்யா தாபர். மாடலிக் துறையில் நுழைந்து பின்னர் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள ராம் பொத்தினேனியின் 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் மார்க்கெட் ராஜா, பிச்சைக்காரன் 2 படங்களிலும், இந்தியில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர், சினிமாவுக்கு வரும் முன் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவ்யா தாபர் கூறும்போது, "சினிமாவுக்கு வரும் முன் விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சென்றேன். அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். 4 வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பிறகு அந்த வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு வந்துவிட்டேன். என்னை நடிகையாகப் பார்க்க வேண்டும் என்பது என் அப்பாவின் கனவு. அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்