பரத் நடிக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹைபர் லிங்க் திரில்லராக உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படம் டிசம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது.;

Update:2024-11-28 20:51 IST

சென்னை,

பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் படத்தை இயக்கியுள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், டிரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பரத் நடிக்கும் அடுத்த படமான `ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பர்ஸ் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

படம் பற்றி இயக்குநர் பிரசாத் முருகன் கூறும்போது, "மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையை பொறுத்துக் கிடைக்கும் சந்தர்ப்பம் தான் ஹீரோ, அது தான் வில்லன். காரணம் ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவன் அதை நன்மைக்கோ, தீமைக்கோ பயன்படுத்துவான். அப்படி 4 பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கமர்ஷியலாக கூறியுள்ளோம்" என்றார்

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. வரும் டிசம்பரில் இந்தப்படத்தை திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்