பின்னால் யாரோ என்னை...- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாலிவுட் நடிகை

பாதுகாவலர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை அவிகா கோர் கூறியுள்ளார்.

Update: 2024-06-18 12:11 GMT

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை அவிகா கோர். இவர், 2008-ம் ஆண்டு வெளியான பாலிகா வது என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். அதில் ஆனந்தி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாதுகாவலர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை அவிகா கோர் கூறியுள்ளார். இது குறித்து அவர்,

'கஜகஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது மேடைக்கு நடந்து சென்றபோது, பின்னால் இருந்து யாரோ தொட்டதுபோல இருந்தது. திரும்பி பார்த்தால் பாதுகாவலர் மட்டும்தான் அங்கு இருந்தார். இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. மற்றொரு முறை நான் மேடையில் ஏற முயன்றபோது, பின்புறமாக ஒருவர் தொட முயன்றார். ஆனால் நான் அதனை தடுத்துவிட்டேன். பின்னர், அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.

நான் நினைத்திருந்தால் அவர்கள் இரண்டு பேரையும் தண்டித்து இருக்கலாம். ஆனால் நான் அதை செய்யவில்லை. அந்த சமயத்தில் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது என்னால் தைரியமாக இது போன்றவர்களை தண்டிக்க முடியும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்று நம்புகிறேன்', இவ்வாறு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்