'பேபி ஜான்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷாருக்கான், விஜய்க்கு நன்றி கூறிய அட்லீ

பேபி ஜான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-12-10 03:09 GMT

மும்பை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இவர் தற்போது, பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரித்தும் வருகிறார்.

பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலிஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

வரும் 25-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வருண் தவான், வாமிகா கபி, அட்லீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அட்லீ, ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் விஜய்க்கு நன்றி கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'ஷாருக்கான் சார் இல்லாமல் என்னால் பாலிவுட்டில் நுழைந்து ஒரு படத்தை இயக்கி தற்போது ஒரு படத்தை தயாரித்திருக்க முடியாது. அதற்காக அவருக்கு நன்றி. நீங்கள் எங்கிருந்தாலும், எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்.

எனது இரண்டாவது நன்றி சகோதரர் தளபதி விஜய்க்கு. என் இதயம், ஆன்மா மற்றும் எல்லாமே அவர்தான். நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். சல்மான் கானுக்கு ஸ்பெஷல் நன்றி' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்