அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படம் கைவிடப்பட்டதா?

அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி பேச்சு வார்த்தை கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update: 2024-06-16 15:08 GMT

தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தை இயக்கினார் அட்லீ.

இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி வசூல் செய்தது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி ப்ரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தெறி படத்தின் இந்தி ரீமேக்கை ப்ரியா அட்லீ தயாரிக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனை இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக தெலுங்கின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தான் இதற்கு காரணம் என்று ஒரு சிலர் கூற, இத்திரைப்படத்திற்கு அட்லீ கேட்ட 80 கோடி ரூபாய் சம்பளம் தான் முக்கிய காரணம் என்று மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்