'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.;

Update: 2025-01-02 12:27 GMT

ஐதராபாத்,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் "ஜரகண்டி" ,'ரா மச்சா மச்சா' மற்றும் 'லைரானா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடிகர் ராம் சரணுக்கு 256 அடி உயரம் கொண்ட கட் - அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட் - அவுட்களிலேயே இதுவே மிகப்பெரியது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்