அனிருத் பிறந்தநாள் : வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த லைகா நிறுவனம்

இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;

Update: 2024-10-16 11:30 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடம் பதித்தவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இன்றைய தலைமுறை திரை இசை ரசிகர்களிடையே செல்வாக்கையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். குத்து பாடல்கள் முதல் காதல் பாடல்கள் வரை 2கே கிட்ஸ் ரசிகர்களின் இசை நாயகனாக வலம் வருகிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்த நிலையில், 'எல்.ஐ.கே' படத்தில் இருந்து 'தீமா' என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியாகி உள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முழு ஆல்பம் பாடல்கள் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், லைகா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்