ஆலியா பட் நடிக்கும் 'ஜிக்ரா' படத்தின் டீசர் குறித்த அப்டேட்

ஆலியா பட் நடித்துள்ள 'ஜிக்ரா' படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.;

Update:2024-09-07 10:46 IST

மும்பை,

இந்தி சினிமாவில் முக்கியமான நடிகையாக இருக்கும் ஆலிய பட் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'ஹைவே, உட்தா பஞ்சாப், ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி' உள்ளிட்ட படங்கள் மிகவும் வரவேற்பினை பெற்றன. அடுத்தபடியாக இவர் ஹாலிவுட்டில் 'ஆர்ட் ஆப் ஸ்டோன்' படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்தார். இதற்கிடையில் சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் கணவர் ரன்பீருடன் 'லவ் அன்ட் வார்' என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்தி வருகிறார் ஆலியா பட்.

தற்போது ஆலியா பட், 'ஜிக்ரா' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 11-ந் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'ஜிக்ரா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த பதிவை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்