"வீரம் படத்தால் என் கெரியரே..." அஜித் பட நடிகை பகீர் பேட்டி

அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனோ சித்ரா;

Update:2025-02-07 10:32 IST

சென்னை,

தமிழில் அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனோ சித்ரா. இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறுகையில், 'வீரம் படப்பிடிப்பு பல இடங்களில் நடந்தது. அப்போது எப்படியாவது நன்றாக நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். ஆனால், படப்பிடிப்பின்போது எனக்குள் பல கேள்விகள் எழுந்தன.

படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார், அதற்கு பின் நீங்கள்தான் அஜித்துக்கு ஜோடி என்றனர். ஆனால் அது பொய் என்று எனக்கு படப்பிடிப்புக்கு வந்தபோதுதான் தெரிந்தது. அதனால், நான் நடிக்க மறுத்து கிளம்ப முடிவெடுத்தேன்.

பின்னர் எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். ஆனால், 2 நாட்களில் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். பின்னர் சில நாட்கள் கழித்து 2 நாட்கள் மட்டும் நடித்துவிட்டு செல்லுங்கள் என்று படக்குழுவினர் கூறினர். அஜித் சாருக்காகத்தான் நான் நடித்தேன். வீரம் படத்தால் தமிழ் சினிமாவில் எனது கெரியர் மிகவும் பாதிப்படைந்தது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்