வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இந்த மாதம் நடக்க இருப்பதை ஒட்டி, தனது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்துள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான 'சொல்லி விடவா' படத்திலும் நடித்து இருந்தார்.
குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இந்த மாதம் 10-ம் தேதி ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர். ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இருக்கும் தனது திரையுலக நண்பர்களையும் மகள் திருமணத்திற்கு அழைத்திருக்கிறார் அர்ஜுன்.
திருமணம் நடக்க இன்னும் ஒருசில தினங்களே இருக்கும் நிலையில், தனது தங்கையுடன் சேர்ந்து பாலியில் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து அசத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அங்கு ஜெட் போட் ரைடு, அட்வென்சர்ஸ் என நேரம் செலவிட்டு மகிழ்ந்திருக்கிறார்.