சினிமாவில் அறிமுகமாக உதவிய மம்முட்டி - பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன்

தான் சினிமாவில் அறிமுகமாக, நடிகர் மம்முட்டி உதவியதாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.;

Update: 2024-10-28 04:00 GMT

சென்னை,

மலையாள படமான பட்டம் போலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' மற்றும் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, கார்த்தி நடிக்கும் சர்தார் 2, பிரபாசுடன் தி ராஜா சாப் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் சினிமாவில் அறிமுகமாக, நடிகர் மம்முட்டி உதவியதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ' மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கதாநாயகியை தேடி வந்தனர். அப்போது என்னைப் பார்த்த மம்முட்டி, நான் அவருடைய மகனுக்கு சரியாக இருப்பேன் என எண்ணி அதில் நடிக்க வாய்ப்பளித்தார்' என்றார்.

கடந்த 2013- ஆண்டு வெளியான படம் பட்டம் போலே. அழகப்பன் இயக்கிய இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம்தான் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்த முதல் படமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்