கன்னட சூப்பர்ஸ்டாரை நேரில் சந்தித்த கே.ஜி.எப் நடிகர்
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர் யாஷ் அவரை நேரில் சந்தித்துள்ளார்.;
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது தனது 131வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கி வருகிறார். இந்நிலையில், கே.ஜி.எப் படம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகரான யாஷ், சிவராஜ்குமாரை மரியாதை நிமித்தமாக படப்பிடிப்பில் நேரில் சந்தித்துள்ளார். இவர்கள் சந்தித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவராஜ்குமார் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மூலம் பிரபலமடைந்தார். மேலும், ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது.
யாஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். மேலும், டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கன்னட சினிமாவின் இரு உச்ச நடிகர்கள் நேரில் சந்தித்துக் கொண்டது அவர்களது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் அத்வைத் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்த 'பாயும் புலி நீ எனக்கு' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.