70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன்'
2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்கள்
சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலி அமைப்பு - பொன்னியின் செல்வன் 1
சிறந்த ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் 1
சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 தேசிய விருதுகளை 'பொன்னியின் செல்வன் 1' அள்ளியுள்ளது.
7வது தேசிய விருதை பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பெறுகிறார் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான்.
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
திருச்சிற்றம்பலம் படத்தின் 'மேகம் கருக்காதா' பாடல் சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது.
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கே.ஜி.எப் 2)
'கே.ஜி.எப் 2' படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தது தமிழக சண்டைப் பயிற்சியாளர்களான இரட்டையர்களான அன்பரிவ் சகோதரர்கள். 'கே.ஜி.எப் 2' படத்திற்காக அன்பறிவ் சகோதரர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே 'கே.ஜி.எப் 1' படத்திற்கும் தேசிய விருது பெற்றுள்ளனர்.