உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 6 ஹாரர் படங்கள்

அன்னாபெல் முதல் தி கான்ஜுரிங் வரை, பல ஹாரர் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.;

Update: 2024-08-12 21:06 GMT

சென்னை,

திகில் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபல மார்வெல் மற்றும் டிசி சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு இணையாக வசூல் செய்யவில்லை என்றாலும், அன்னாபெல் முதல் தி கான்ஜுரிங் வரை, பல ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படும் படங்களாக உள்ளது.

அந்த வகையில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த டாப் 6 ஹாரர் படங்களை தற்போது காணலாம்.

6. எ கொயட் பிளேஸ்

'எ கொயட் பிளேஸ்' 2018-ல் வெளியான அபோகாலிப்டிக் ஹாரர் திரில்லர் படமாகும். ஜான் கிராசின்ஸ்கி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் எமிலி பிளண்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $334 மில்லியனுக்கு மேல் வசூலித்தது.

5. ஹன்னிபால்

ரிட்லி ஸ்காட் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜுலியானே மூருடன் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகர் ஆண்டனி ஹாப்கின்ஸ் நடித்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $350 மில்லியனுக்கும் மேல் வசூலித்து.

4. தி நன்

கோரின் ஹார்டி இயக்கிய தி நன், 2018ல் வெளியான திகில் திரைப்படமாகும். இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் $362 மில்லியனைப் பெற்றது.

3. தி எக்ஸார்சிஸ்ட்

1973 இல் வெளியான தி எக்ஸார்சிஸ்ட் திரைப்படம் எல்லா காலத்திலும் சிறந்த ஹாரர் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

வில்லியம் பிரைட்கின் இயக்கிய இப்படம் பல இடங்களில் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. $428 மில்லியன் வசூலுடன் தி எக்ஸார்சிஸ்ட் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

2. இட் சாப்டர் 2

இட் சாப்டர் 2, 2019 இல் வெளியானது. $ 467 மில்லியன் வசூலித்த ஆண்டி முஷியெட்டி இயக்கிய இத்திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

1. இட் சாப்டர் 1

2017 இல் வெளியான இட் சாப்டர் 1 எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆண்டி முஷியெட்டி இயக்கிய திரைப்படம் உலகளவில் $702 மில்லியன் வசூல் செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்