பிரபாஸ் நடிக்க மறுத்து ஹிட் அடித்த 5 படங்கள்

நடிகர் பிரபாஸ் நடிக்க மறுத்து ஹிட் அடித்த 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-07-14 05:25 GMT

image courtecy:instagram@actorprabhas

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் நடிப்பில், கடந்த மாதம் 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இதில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர்.

இப்படம் தற்போதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், பிரபாஸ் நடிக்க மறுத்து ஹிட் அடித்த 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

1.ஒக்கடு (Okkadu)

கடந்த 2003-ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான படம் ஒக்கடு. இதில் கதாநாயகியாக பூமிகா நடித்திருந்தார். குணசேகர் இயக்கிய இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில், மகேஷ் பாபுவுக்கு முன்பாக பிரபாஸ் நடிக்க இருந்தாராம். ஆனால், கதைக்களம் மிகவும் கடினமாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

2.சிம்ஹாத்ரி (Simhadri)

கடந்த 2003-ம் ஆண்டு ஜுனியர் என்.டி.ஆர், பூமிகா நடிப்பில் வெளியான படம் சிம்ஹாத்ரி. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முதலில் பிரபாஸ் நடிக்க இருந்ததாகவும், பின்னர் சில காரணங்களுக்காக அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

3.ஆர்யா (Arya)

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் ஆர்யா. இப்படத்தில், நடிக்க முதலில் பிரபாசிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால், ஒருதலை காதலனாக நடிக்க அவர் விரும்பாததால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

4.நாயக் (Naayak)

ராம் சரண், காஜல் அகர்வால், அமலாபால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் நாயக். வி.வி.விநாயக் இயக்கிய இப்படத்தில் முதலில் பிரபாஸ் நடிக்க இருந்தாராம். ஆனால், அப்போது அவர் வேறொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் இதில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

5.பிருந்தாவனம் (Brindavanam)

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் பிருந்தாவனம். இதில், ஜுனியர் என்.டி.ஆர், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். இந்த படத்தில் முதலில் பிரபாஸ் நடிக்க இருந்ததாகவும், பின்னர் சில காரணங்களுக்காக அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்