இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை... ... இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிப்பு

இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு, நாளை (செப்டம்பர் 23ம் தேதி) இலங்கையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-09-22 02:45 GMT

Linked news