வரலாறு படைக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு முழுமையாக சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பொறுமையாக வரிசையில் நிற்பதையும், தங்கள் உரிமையைப் பயன்படுத்த காத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

இது ஜனநாயக திருவிழா. கடந்த காலங்களில் தேர்தலுக்கு இடையூறு செய்த பகுதிகள், தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பகுதிகளில் இப்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் வரலாறு உருவாகி வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது பாராட்டுக்குரியது. இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2024-09-25 10:25 GMT

Linked news