நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதல்-அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுசீரமைப்பு மூலம் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க ஒருங்கிணைவோம். நியாயமான மறுசீரமைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுப்பட்ட அனைத்து முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களையும், இந்த கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Update: 2025-03-22 05:09 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025