தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025
தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது.
குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுகின்றனர்.
முந்தின ஆண்டை காட்டிலும் குற்றச்சம்பவங்கள் 2024-ல் 31,438 ஆக குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் பழிக்குப்பழி வாங்குவோரின் கொலைகளும் குறைந்துள்ளன என கூறியுள்ளார்.
Update: 2025-03-20 06:57 GMT