அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.arasubus.tn.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2025-03-20 04:17 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-03-2025