நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை தொடங்குகிறது
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நாளையும் நாளை மறுதினமும் (வெள்ளி, சனி) விவாதம் நடத்தப்படுகிறது.
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைப்பார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் இதேபோன்ற விவாதத்தை தொடங்குவார் என தெரிகிறது. அரசியலமைப்பு மீதான விவாதத்தின் நிறைவில் பிரதமர் மோடி பதிலுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2024-12-12 15:23 GMT