உக்ரைனில் ரஷிய படைகளிடம் இங்கிலாந்து நாட்டினர்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற தயாராகும் ரஷியா


உக்ரைனில் ரஷிய படைகளிடம் இங்கிலாந்து நாட்டினர் ஐடன் அஸ்லின் (வயது 28), ஷான் பின்னர் (48) மற்றும் மொராக்கோவை சேர்ந்த சவுதின் பிராகிம் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.

அவர்கள் மீது உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கோர்ட்டு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாதது ஆகும்.

கூலிப்படையினர் என கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து நாட்டினர் இருவரும் உக்ரைன் படையினர் என அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-10 00:32 GMT

Linked news