உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி பொருட்கள்... ... #லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற தயாராகும் ரஷியா
உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி பொருட்கள் கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்களின் துன்பம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. சபையின் அறிக்கை கூறுகிறது. இதுபற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிக்கை உணவு பாதுகாப்பு, எரிசக்தி, நிதி ஆகியவற்றில் உக்ரைன் போர் முறையான, கடுமையான, வேகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை காட்டுகிறது” என கூறினார்.
மேலும் போருக்கு மத்தியிலும் உக்ரைனின் உணவு தானிய உற்பத்தியும், ரஷியாவின் உர உற்பத்தியும் உலக சந்தைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Update: 2022-06-09 22:56 GMT