ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடை உக்ரைன் மீது போர்... ... #லைவ் அப்டேட்ஸ்: ரஷிய போரால் உக்ரைனுக்கு ரூ.45 லட்சம் கோடி இழப்பு
ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் தடைகள் தொடர்கின்றன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தது.
இதன்படி ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்பட்டு 6 மாதங்களில் முடிவுக்கு வந்து விடும். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதும் 8 மாதத்தில் முடிவுக்கு வரும்.
Update: 2022-06-03 22:26 GMT