பீகார் இடைத்தேர்தல்: 4 சட்டசபை தொகுதிகளில்... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
பீகார் இடைத்தேர்தல்: 4 சட்டசபை தொகுதிகளில் இரண்டில் பா.ஜ.க. முன்னிலை : பிரஷாந்த் கிஷோர் பின்னடைவு
மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே 13 மாநிலங்களுக்கு உள்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டசபை தொகுதிகளில் இரண்டில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.
முதன்முறையாக தேர்தலில் களம் கண்ட பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பின்னடைவு சந்தித்துள்ளது.
Update: 2024-11-23 06:11 GMT