மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான ஆளும்... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.

முன்னிலை நிலவரம்:-

பா.ஜனதா கூட்டணி - 224

காங்கிரஸ் கூட்டணி - 53

பிற கட்சிகள் - 11

Update: 2024-11-23 05:06 GMT

Linked news