பக்தர்கள் நன்கொடையில் ஏழுமலையானை மிஞ்சும்... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பக்தர்கள் நன்கொடையில் ஏழுமலையானை மிஞ்சும் ராமர்?
இந்தியாவிலேயே பக்தர்கள் அதிகம் நன்கொடை தரும் கோவிலாக திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 500 கோடி வரை பக்தர்கள் நன்கொடை தந்து உள்ளனர்.
அதே போல் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை பக்தர்கள் நன்கொடை தந்து உள்ளனர். இது சராசரியாக ஆண்டுக்கு ரூ.1666 கோடியாக இருக்கிறது. எனவே வருங்காலங்களிலும் இதேநிலை நீடிக்கும்பட்சத்தில் ராமர் கோவில் வருமானம், திருப்பதி ஏழுமலையான் கோவிலை மிஞ்சுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Update: 2024-01-21 22:17 GMT