அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 3... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தீபாவளி பண்டிகையைபோல் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி இன்று இரவு அயோத்தியில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். அதுபோல், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ‘ராம ஜோதி’ ஏற்றி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களும் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ‘கருண்’ என்ற விசேஷ டிரோன் உதவியுடனும் கண்காணிப்பு பணி நடக்கிறது.
சரயு நதியில், நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இதேபோல் டெல்லியிலும் முக்கிய கோவில்கள், சந்தைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.