மும்பை, பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்... ... திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு

மும்பை,

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் அவர்களின் பணி பாதுகாக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்டேட் செய்தவர்களின் கணினிகளில் 'புளூ ஸ்க்ரீன் எரர்' காண்பிக்கிறது.

இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனிடையே, வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. 

Update: 2024-07-19 11:10 GMT

Linked news