உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி...! ... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி...!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த அர்ஜெண்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸ், கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பெனிஸ், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவி உர்சுலா வென் வெ லியன், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் சார்லஸ் மைகில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.

இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பிமுஷி கிஷிடா, தென்கொரிய அதிபர் யோன் சுக் யெலோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமப்சொ, துருக்கி அதிபர் எர்டோகன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரேசில் அதிபர் லிசி இனசியோ, சீன பிரதமர் லி குவான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.

Update: 2023-09-09 05:25 GMT

Linked news