ஜனாதிபதி விருந்தில் இடம்பெறும் உணவு பதார்த்தங்கள் ... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
ஜனாதிபதி விருந்தில் இடம்பெறும் உணவு பதார்த்தங்கள்
ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். விருந்தில், இந்தியாவில் மழைக்காலத்தில் சாப்பிடும் உணவு பண்டங்களை மனதில் வைத்து, விசேஷமான உணவு தயாரிக்கப்படும். சிறுதானிய உணவு வகைகளும் இடம்பெறும்.
குலோப் ஜாமுன், ரசமலாய், ஜிலேபி போன்ற இனிப்புவகைகளும் பரிமாறப்படும். வெளிநாட்டு பிரதிநிதிகள் மறக்க முடியாத சுவையுடன் செல்லும்வகையில், உணவுவகைகள் இருக்கும்.
உணவு வகைகள் அனைத்தும் வெள்ளி பாத்திரங்களில் பரிமாறப்படும். குளிர்பானம் கொடுக்கும் தட்டுகள், தங்க முலாம் பூசியதாக இருக்கும்.
Update: 2023-09-08 20:08 GMT