விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறதில் அதில்,
9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு!
விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ரெயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு - ₹2,40,000 கோடி
50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்
மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்