7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்...! நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. பிரதமர் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிக்கபெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்.

அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம். தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசுமை வளர்ச்சி இளைஞர்நலன் உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

* சுற்றுலாவை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* வேளாண் துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* வேளாண் துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும்.

* "குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்"

* விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

* வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு"

* 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

"மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை”

* கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்!

* ஒருங்கிணைந்த வளர்ச்சி கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்தலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

Update: 2023-02-01 06:06 GMT

Linked news