வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து... ... கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
*பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது
*இந்த அரங்கத்தை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம் என்று பெயரிட்டவர் கருணாநிதி
*கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கையா நாயுடு
*கலைஞர் சிலையை யார் திறப்பது என்று யோசித்த போது எங்க்ள் நெஞ்சியில் தோன்றியது வெங்கையா நாயுடு தான்.
*இந்தியாவின் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி
*கருணாநிதிக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது
*நமது நாட்டில் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்
*வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது
*கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.