கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைத்தார்.
கருணாநிதி சிலையை திறந்து வைத்த பின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:
கலைஞர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் கருணாநிதி
இந்தியாவின் பெருமை மிக்க முதல் அமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்.
என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன்.கருணாநிதி சிறந்த நிர்வாகத்திறமை கொண்டவர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கருணாநிதி
அரசியல் பதவி முள்கிரீடம் என்று கூறியவர் கருணாநிதி. தமிழ் சினிமாவின் புதிய அத்தியாத்தை எழுதியவர் கருணாநிதி.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. என்ற குறள் கலைஞருக்கு பொருந்தும்.
தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கருணாநிதி. மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கருணாநிதியின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும்.
வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
*பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது
*இந்த அரங்கத்தை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம் என்று பெயரிட்டவர் கருணாநிதி
*கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அன்றைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்தவர் வெங்கையா நாயுடு
*கலைஞர் சிலையை யார் திறப்பது என்று யோசித்த போது எங்க்ள் நெஞ்சியில் தோன்றியது வெங்கையா நாயுடு தான்.
*இந்தியாவின் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி
*கருணாநிதிக்கு எத்தனை சிலைகள் அமைத்தாலும் ஈடாகாது
*நமது நாட்டில் பல ஜனாதிபதிகளை உருவாக்கியவர் கலைஞர்
*வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது
*கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.
மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வரவேற்புரை நிகழ்த்திய அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கூறியதாவது;- கருணாநிதியின் சிலையை பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது. நம்முடன் நேரில் பேசுவதை போல் கலைஞரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எங்களை போல வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர். விழாவில் பங்கேற்று சிலையை திறந்து வைத்த துணை ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைர முத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு கீழ் 5 கட்டளைகள் பொறிக்கப்படுள்ளன.
1.வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்
2. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
3. ஆதிக்கமற்ற சமுதாயமே அமைத்தே தீருவோம்
4.இந்தி திணைப்பை எதிர்ப்போம்
5.மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல் அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.07 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பு விழாவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.