ஹமாஸ் வசம் 210 பிணைக்கைதிகள்:- இஸ்ரேலுக்குள்... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
ஹமாஸ் வசம் 210 பிணைக்கைதிகள்:-
இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது பலரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழு வெளிநாட்டினர் உள்பட பலரை பிணைக்கைதிகளாக காசாவுக்கு கடத்தி சென்றுள்ளது. ஹமாஸ் தாக்குதலின் போது மாயமான இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹமாசால் காசா முனைக்கு 210 பேர் பிணைக்கைதிகளாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ தலைமை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹமாசால் 210 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஹமாஸ் தன் வசம் இருந்த அமெரிக்காவை சேர்ந்த 2 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட 2 பேரும் கடந்த 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் நடந்த தாக்குதலில் ஹமாசால் காசாமுனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்கள் ஆவர். வடக்கு காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழு வலிமையாக உள்ள பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்றார்.