ஹமாசுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

ஹமாசுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை - ஜோ பைடன் பரபரப்பு குற்றச்சாட்டு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹமாசின் பயங்கரவாதமும், புதினின் சர்வாதிகாரமும் வெவ்வேறு அச்சுறுத்தல்களைக் கொண்டவை. ஆனால் இருவருக்குமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதே இலக்கு. இதுபோன்ற சர்வதேச ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் அதனால் ஏற்படும் மோதல்களும், குழப்பங்களும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இதனால் பாதிப்புகள் அதிகமாகும். ஆகையால் இந்த சூழலில் இத்தகைய போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டும். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. எனவே இருநாடுகளுக்கும் வழங்கும் ராணுவ உதவியை கோடிக்கணக்கில் அதிகரிக்க நாடாளுமன்றத்தை நான் வலியுறுத்துவேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்பதை புரியவைப்பேன்.

இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.

Update: 2023-10-20 23:32 GMT

Linked news