காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பழமையான... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பழமையான தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு
காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலின் அதிர்ச்சியில் மீள்வதற்குள் அங்கு பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பழமையான தேவாலயம் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பயந்து காசா மக்கள் குடும்பம் குடும்பாக வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அந்த வகையில் காசா சிட்டியில் உள்ள மிகவும் பழமையான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த தேவாலயத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் தேவாலயம் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் இஸ்ரேல் ராணுவத்தால் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெற்கு காசாவில் உள்ள ரபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாகவும், இதில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் ஹமாஸ் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. இப்படி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.