இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே உக்கிரமடையும் போர்:... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே உக்கிரமடையும் போர்: 15-வது நாளாக நீடித்து வருகிறது

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7-ந் தேதி போர் வெடித்தது. உலக நாடுகளை கவலையடைய செய்துள்ள இந்த போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. 14 நாட்களாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. இதே நிலையில் தாக்குதல் தொடர்ந்தால் காசாவில் பல்வேறு பகுதிகள் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களாக மாறும் என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதை பொருட்படுத்தாத இஸ்ரேல் வான்வழி தாக்குதலுடன், காசா மீது தரைவழி தாக்குதலை தொடுக்கவும் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி இஸ்ரேல் வீரர்களை அந்த நாட்டு ராணுவ மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கடந்த 17-ந் தேதி இரவு காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 500-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என கூறி இஸ்ரேல், பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் குண்டு தவறுதலாக ஆஸ்பத்திரி மீது விழுந்ததாக குற்றம் சாட்டியது.

Update: 2023-10-20 22:14 GMT

Linked news