நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வெறிச்சோடிய... ... வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: வெறிச்சோடிய வீதிகள்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையில் இருந்து 370 கி.மீ., தொலைவில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் காரணமாக நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாகூரில் பெய்து வரும் கனமழையால் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Update: 2024-11-27 06:59 GMT