புயல் இன்னும் கரையை கடக்கவில்லை - தனியார் வானிலை... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை - தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்



புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் பெஞ்சல் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. இன்னும் கடலில்தான் நிலைகொண்டுள்ளது. இன்று பிற்பகல் அல்லது மாலைக்குள் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்றும் திடீரென ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Update: 2024-12-01 06:58 GMT

Linked news