வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பெஞ்சல் புயல் கரையை கடந்தும் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.;

Update:2024-12-01 09:19 IST


Live Updates
2024-12-01 16:18 GMT

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தொடர் கனமழையால் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதைபோல கனமழையால் சென்னை, திருவள்ளுவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.02) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

2024-12-01 15:43 GMT

மேலும் வலுவிழந்தது பெஞ்சல் புயல்

பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட உள் தமிழ்நாட்டில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-12-01 14:50 GMT

விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு

கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.02) விழுப்புரம் செல்கிறார். நாளை காலை 11 மணிக்கு விழுப்புரம் செல்லும் முதல்-அமைச்சர் மழை பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளார்.

2024-12-01 14:25 GMT

சேலத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2024-12-01 13:53 GMT

கள்ளக்குறிச்சியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2024-12-01 13:46 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2024-12-01 13:19 GMT

ராணிப்பேட்டையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

2024-12-01 13:02 GMT

கனமழை எதிரொலியாக கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2024-12-01 13:01 GMT

கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2024-12-01 12:59 GMT

விழுப்புரம், கடலூரில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் அம்மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்று பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். புருஷோத்தமன் நகரப் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை துணை முதல்-அமைச்சர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்