சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொளத்தூர் செல்வி நகரில் பொதுமக்களை சந்தித்த அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.  

Update: 2024-12-01 06:31 GMT

Linked news