நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய சந்திரயான்: கட்சித்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய சந்திரயான்: கட்சித் தலைவர்கள் பாராட்டு

புதுடெல்லி,

‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பல தரப்பில் இருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பா.ஜனதா

இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தளர்வில்லா முயற்சிகளாலும், நமது விஞ்ஞானிகளின் அளப்பரிய திறமையாலும்தான் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, இதுவரை நிகழ்த்தப்படாத சாதனை ஆகும்’ என்றார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘லேண்டர்’ நிலவில் தரையிறங்கியது, ஒவ்வொரு இந்தியரின் கூட்டு வெற்றி ஆகும்.

140 கோடி அபிலாஷைகளுடன் பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிற நாடு, நமது 60 ஆண்டுகால விண்வெளி திட்டத்தின் மற்றும் ஒரு சாதனையை இன்று கண்டிருக்கிறது.

இந்த விண்வெளிப் பயண திட்டத்தை வெற்றியாக்கிய நமது விஞ்ஞானிகள், விண்வெளி என்ஜினீயர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இதில் தொடர்புடைய அனைவரின் அசாதாரண கடின உழைப்பு, இணையற்ற புத்திக்கூர்மை, மாறாத அர்ப்பணிப்புக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.’

இவ்வாறு அவர் கூறினார்.

ஆம் ஆத்மி

டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இது ஒரு வரலாறு. நம் நாட்டுக்கு மிகப்பெரிய சாதனை. நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். நாட்டு மக்கள் அனைவருக்கும், விஞ்ஞானிகளுக்கும், என்ஜினீயர்களுக்கும், இஸ்ரோ ஊழியர்களுக்கும் வாழ்த்துகள். பாரத மாதாவுக்கு வணக்கம்’ என்று கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அபார வெற்றிக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-23 22:43 GMT

Linked news