சந்திரயான்-3 கடந்து வந்த பாதை இந்த ஆண்டு ஜூலை... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்
சந்திரயான்-3 கடந்து வந்த பாதை
இந்த ஆண்டு ஜூலை 14:- ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இலகுரக செலுத்து வாகனம் மூலமாக சந்திரயான்-3 செலுத்தப்பட்டது. சரியான சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 தனது பயணத்தை தொடங்கியது.
ஜூலை 15:- பெங்களூருவில் இருந்து சந்திரயான்-3 சுற்றுவட்டப்பாதையை முதல் முறையாக உயர்த்தும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தது.
ஜூலை 17:-2-வது தடவையாக சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தது.
ஜூலை 22- 3-வது தடவையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
ஜூலை 25:- 4-வது தடவையாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்டு 1:- நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 ஐ ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக நுழைத்தது.
ஆகஸ்டு 5:- நிலவின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.
ஆகஸ்டு 6:- 2-வது தடவையாக நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. சந்திரயான்-3 பார்வையில் எடுக்கப்பட்ட நிலவின் வீடிேயாவை ‘இஸ்ரோ’ வெளியிட்டது.
ஆகஸ்டு 7:- சந்திரயான்-3 சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.
ஆகஸ்டு 14:- நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 சுற்றி வந்தது.
ஆகஸ்டு 17:- சந்திரயான் விண்கலத்தின் உந்துகலனில் இருந்து ‘லேண்டர்’ கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
ஆகஸ்டு 19:- லேண்டர் சாதனத்தின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.
ஆகஸ்டு 20:- மீண்டும் லேண்டர் சாதனத்தின் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.
ஆகஸ்டு 21:- சந்திரயான்-2 வில் உள்ள ஆர்பிட்டர் கருவி, லேண்டர் சாதனத்தை வரவேற்றது. இரு சாதனங்களுக்கும் இடையே இருவழி தகவல் தொடர்பு உருவானது.
ஆகஸ்டு 22:- லேண்டர் சாதனம் எடுத்த நிலவின் புகைப்படம் வெளியிடப்பட்டது.